நாளை தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் மற்றும் பேருந்து இயக்க ஏற்பாடு..!! ஏன் தெரியுமா..?
நாளை ஆடி கிருத்திகை என்பதால் தமிழகம் மட்டுமின்றி நாடெங்கும் உள்ள முருகர் கோவிலில் விஷேசமாக இருக்கும். முக்கியமாக முருகரின் ஆறு படை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை.
கடந்த மூன்று நாட்களகாவே முருகர் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் நாளை ஆடி கிருத்திகை என்பதால் இன்னும் கூட்டம் அலைமோதும் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
அதிலும் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.., எனவே நாளை ஆடி கிருத்திகை என்பதால் கூடுதலாக 300 பேருந்துகளும் 20 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கங்கே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் இந்த சிறப்பு பேருந்து வசதி ஜூலை 10ம் தேதி வரை இயக்கப்படும் எனவும் மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
Discussion about this post