வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் ‘புரோட்டா சூரி’ என்ற புனைப்பெயர் பெற்று, பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக கலக்கி வரும் சூரி, முதன் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
வாச்சாத்தி சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களிலும் சூரியின் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் திண்ணப்பா திரையரங்கில் நடிகர் சூரி நடித்த விடுதலை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று அவரது ரசிகர்கள் கட் அவுட், வால் போஸ்டர், பேனர் மற்றும் தாரை தப்பட்டை என தடபுலாக ஏற்பாடுகளை செய்துள்ளனர்.