“சிவகார்த்திகேயன் ஒரு துரோகி.. நிஜ வாழ்க்கையில் அவன் வில்லன்”.. இசையமைப்பாளர் பகிர் ட்விட்..!!
நகைச்சுவை உணர்வோடு ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கும் சிவகார்த்திகேயன் மீது இசையமைப்பாளர் டி.இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கூறி ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட்டை பதிவிட்டுள்ளார்..
பிரபல முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் “சிவகார்த்திகேயன்” நடிப்பாலும் நகைச்சுவை பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தார்..
தற்போது SK21 என்ற படத்தில் சாய்பல்லவியுடன் கமலஹாசன் தயாரிப்பில் நடித்து வருகிறார்.., சில நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளர் டி.இமான் அளித்திருந்த பேட்டியில் நகரத்தில் எடுக்கப்படும் படங்களுக்கு அனிருத் இசையும், கிராமத்தில் எடுக்கப்படும் படங்களுக்கு டி. இமான் இசை என நடிகர் சிவகார்த்திகேயன் பாகுபாடு பார்கிறார்…
தனது 10 ஆண்டு கால வளர்ச்சிக்கு எங்கள் இருவரையும் சிவகார்த்திகேயன் அதிகம் பயன்படுத்திக் கொண்டார்.
மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் சிவகார்த்திகேயன், டி. இமான் காம்போ சூப்பராக இருந்தது..
ஆனால் இந்த அருமையான காம்போ சில காலாக ஏன் சினிமாவில் பார்க்க முடியவில்லை.., இப்போது வருகிற படங்களில் எல்லாம் ஏன் உங்கள் இசை சிவகார்த்திகேயன் படத்தில் இல்லை என கேட்டதற்கு..
சிவகார்த்திகேயன் செய்த துரோகம் :
சிவகார்த்திகேயன் எனக்கு செய்த இந்த துரோகத்தை நான் இந்த ஜென்மத்தில் மன்னிக்க மாட்டேன்.., இனி சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன்.. என்னுடைய இசையால் தான் அவர் பாடகராக அறிமுகமாகினார்…
ஆனால், இப்போது என்னை நம்ப வைத்து துரோகம் செய்து என் முதுகில் குத்தி விட்டார்.. சிவகார்த்திகேயன் செய்த துரோகம் செய்த துரோகம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.., இதற்கு மேல் அவனை பற்றி பேச விரும்பவில்லை முக்கியமாக அவன் செய்த துரோகம்..
என இமான் பேசியிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..