மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி, 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம், இன்று நள்ளிரவு (ஏப்ரல் 14ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.
இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம் வருகிற 15 ம் தேதி துவங்குகிறது. இதனையொட்டி குமரி கிழக்கு கடலோர பகுதிகளில் நாளை மறுநாள் முதல் 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 350 க்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாது.
குறிப்பு – குமரி – நெல்லை மீனவர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை மற்றும் சில கோரிக்கைகள் காரணமாக ஏற்கனவே சில மாதங்களாக சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெரும்பாலான விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.