இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவிற்கு அழைத்த சங்கர்..! மறுப்பு கூறிய ரஜினி..! காரணம் இதுவா..!!
அபூர்வராகம், வருஷம் பதினாறு,ஆடுப்புலி ஆட்டம்,நினைத்தாலே இனிக்கும் என பல திரைப்படங்களில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்துள்ளனார். ஆனால் ரஜினிக்கு முன்னரே கமல் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இருவரும் தனித்தனியாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினர். இருவரின் நடிப்பும் வரவேற்க்கப்பட்டது. இதன் மூலம் கமல் காதல் மன்னனாகவும் ரஜினி சூப்பர் ஸ்டாராகவும் மக்களால் அறியப்பட்டார்கள்.
சினிமாவை பொருத்தவரை இப்படி இரண்டு நடிகர்கள் கிட்டத்தட்ட 50 வருடங்கள் நண்பர்களாக இருப்பது என்பது ஆச்சிரியமானது. சமிபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட என்னையும் ரஜினியையும் போல நண்பர்கள் சினிமாவில் யாரும் கிடையாது’ என சவாலே விட்டார் கமல்ஹாசன். அந்த அளவுக்கு இருவரின் நட்பு 50 வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கமலின் பல திரைப்படங்களை பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கே போய் பாராட்டிவிட்டு வருவாராம் ரஜினி. அதுமட்டுமல்லாமல் கமல் நடிப்பில் வெளிவந்த ஹேராம் படத்தை 20 முறைக்கும் மேல் பார்த்து பாரட்டியுள்ளார்.
இந்தியன் 2 இசைவெளியீட்டு விழா :
சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் தொடர்கதையாக உருவாக உள்ள இந்தியன் 2 திரைப்படம் கமல் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார் இயக்குநர் சங்கர். ஆனால் ரஜினி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான காரணம் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அங்கு முழுக்க கமல் ரசிகர்கள் இருப்பார்கள். நான் எதையாவது பேசி கமல் ரசிகர்கள் எதாவது கமெண்ட் அடித்தால் அது எனக்கும் சங்கடமாகி விடும். கமலுக்கும் சங்கடமாகி விடும் என்பதால் வரவில்லை என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..