தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே பாலியல் தொல்லை..!!
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே சில பெண்கள் பாலியல் தொழில் ஈடுபட்டு வருவதாகவும் அதை பார்த்தும் போலீசார் நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கின்றனர் எனவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஒட்டியிருக்கும் தெற்கலங்கம் சாலையில் உள்ளது. அந்த பிராதன சாலையில் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் இருப்பதால் மக்கள் நடமாற்றம் என்றும் இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் மண்டப சந்தின் வழியில் சில பெண்கள் நின்று கொண்டு.., அந்த வழியே செல்லும் ஆண்களுக்கு பாலியலுக்கு அழைப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் வெட்ட வெளியில் இதுபோன்ற செயல்கள் நடப்பதால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்த படி கடந்து செல்வதாகவும் அருகில் போலீஸ் பூத் இருந்தும் அதை தடுக்க யாரும் முன் வருவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சில வணிகர்களுடன் பேசிய போது “மண்டபத்தில் உட்பகுதியில் ஹோட்டல்கள், ஏராளமான மொத்த வியாபார கடைகள் மற்றும் குடியிருப்புகள் இருப்பதாகவும், அந்த பகுதியில் இதற்கு முன் மதுபான கடைகள் இயங்கி வந்தது தமிழக அரசு தற்போது மதுபான கடைகள் மூடியதால் மது பிரச்சனையும் அதனால் ஏற்படும் விளைவும் குறைந்துள்ளது.
அதுபோல இந்த பாலியல் தொழில் செய்பவர்கள் மீது அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் சில தவறுகள் குறையும்.., இந்த பாலியலுக்கு செல்வது பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் தான் 18 வயதிற்கு மேற்பட்ட பல ஆண்கள் அந்த பாதையில் சென்று விடுகின்றனர்.
பட்டபகலில் இருந்து இரவு வரை இந்த செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது அதை தடுக்க யாரும் முன் வருவதில்லை முக்கியமாக இந்த செயல் பேருந்து நிலையம் பக்கத்தில் இருக்கும் போலீஸ் பூத் அருகே தான் நடக்கிறது. 24 மணி நேரமும் காவல்துறையினர் அந்த பூத்தில் தான் இருக்கிறார்கள் ஆனால் இதுகுறித்து யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.
வியாபாரிகளும் பொதுமக்களும் புகார் அளித்தும்.., யாரும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை அந்த பகுதியை கடந்து செல்லும் பொழுது முகம் சுளித்து விட்டு செல்ல வேண்டி இருக்கிறது என, வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக புகழ் பெற்று விளங்கும் “தஞ்சை”. இதுபோன்ற கொடுமை செயல்களை செய்து வருகின்றனர்.
இந்த பாலியல் தொழில் செய்து கொண்டு வருபவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post