சாக்லேட் என்ற பெயரில் கஞ்சா விற்பனை..!! மர்ம நபர்கள் சிக்கியது எப்படி..?
வேலூர் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா, உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதை தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இதனையடுத்து காட்பாடி டிஎஸ்பி சரவணன் உத்தரவின் பேரில் காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், உதவி ஆய்வாளர் கார்த்தி தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ. டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் (மோமோஸ் ஸ்னாக்ஸ்) கடையில் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது அக்கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்ததுஇதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21) ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..