மதுரையில் கூடாத கூட்டத்தை இங்க பாருங்க..! எடப்பாடி பழனி சாமியின் அடுத்த திட்டம்..?
மதுரை மாநாட்டு தீர்மானங்களை விளக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியது அண்ணாவின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 15ம் தேதி முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை ‘‘அண்ணாவின் பிறந்தநாள் விழா” மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கும் பொதுக்கூட்டங்கள்’’ அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், புதுவை, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திர, மாகராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் அந்தந்த தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் நடைபெற உள்ள மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அந்தந்த தொகுதியில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தாம்பரம் தொகுதியில் செப்டம்பர் 15ம் தேதி நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேச இருக்கிறார்.
பொன்னேரி தொகுதியில் தமிழ் மகன் உசேன், வேப்பன்ஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன், பர்கூர் தொகுதியில் தம்பித்துரை, ஈரோடு கிழக்கு தொகுதியில் செங்கோட்டையன், குமாரபாளையம் தொகுதியில் தங்கமணி, தொண்டாமுத்தூர் தொகுதியில் வேலுமணி, ராயபுரத்தில் ஜெயக்குமார், மதுரை தெற்கு தொகுதியில் செல்லூர் ராஜு ஆகியோர் பேசு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..