விருத்தாசலம் அருகே வி. குமாரமங்கலம் கிராமத்தில் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி கூலி தொழிலாளி இவரது மகன் தினேஷ் (வயது 14) இவர் கம்மாபுரம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் இன்பராஜ் வயது 8 இவர் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். இரண்டு பேரும் அங்கு உள்ள ஏரியில் இன்று காலை மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக இன்பராஜ் நீரில் மூழ்கியுள்ளான் அப்பொழுது அங்கிருந்த தினேஷ் அவனை காப்பாற்ற குதித்த போது இரண்டு பேரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இரண்டு பேரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் இரண்டு பேரும் இறந்துவிட்டனர் என கூறினர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.