குஷி பட விழாவில் கலந்துக்கொண்ட நடிகை சமந்தா மற்றும் தேவர் கொண்ட டூயட் நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்து இழுத்தது.
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்த ’குஷி’ திரைப்படம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா நேற்று சுதந்திர தினத்தில் நடந்தது. இந்த விழாவில் விஜய் தேவரகொண்டா, சமந்தா உட்பட குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் இது குறித்த புகைப்பட ஆல்பங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் மேடையில் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் ’குஷி’ படத்தின் பாடலுக்கு நடனம் ஆடினர். இருவரும் லைவ்வாக இந்த நிகழ்ச்சியில் நடனமாடியது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. கிளாமர் உடையில் வந்த சமந்தாவை நடிகர் விஜய் தேவரகொண்டா அலேக்காக தூக்கி ரொமான்ஸ் செய்த காட்சி இருவரின் செம்ம கெமிஸ்ட்ரியை உறுதி செய்தது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது