ஜே.பி.நட்டாவிற்கே மறுப்பு..!! திகைத்து போன பாஜக..!!
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளும் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரியில் 24 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது . பாஜகவிற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது, இந்து மக்கள் கட்சியினருக்கு, பாஜக வேட்பாளர் அழைப்பு விடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
அதேபோல, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் போதும் இந்து மக்கள் கட்சி கொடியை பாஜக வேட்பாளர் ரமேஷ் புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தேர்தல் நோட்டீஸ், பேனர்களிலும், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் புகைப்படம் மற்றும் கொடியை புறக்கணிதுள்ளனர்..
இந்நிலையில், அண்ணாமலையின் ஆதரவோடு நாகை வேட்பாளராக களமிறங்கினார். ஆனால், அவர் இந்து மக்கள் கட்சியை புறக்கணித்து வருவதால், அக்கட்சியினர் கடுப்பாகி ஆதரவு கிடையாது என தெரிவித்துள்ளனர். இந்து மக்கள் கட்சியினர் மட்டுமின்றி நாகை மக்களும் பாஜகவிற்கு எதிராக செயல்படுவது அண்ணாமலை பாஜகவிற்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் பரப்புரைகளில் தீவிரம் காட்டி வருகின்றது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்வதற்காக நட்டா இன்றிரவு திருச்சி வரவுள்ளார். திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த பாஜக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது.
ஆனால், ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை காரணம் காட்டி, காவல்துறை, தேர்தல் அலுவலர் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.
மாற்றுப் பாதையை தேர்ந்தெடுக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், 36 மணி நேரத்துக்கு முன்பாக ஆன்லைனில் அனுமதி கோரியிருந்த நிலையில் மறுப்பதாக பாஜகவினர் குற்றச்சாட்டுயுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..