“செந்நீர் சிந்திய உத்தமர் நல்லகண்ணு..” முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்..!!
நான் இங்கு வாழ்த்த வரவில்லை, வாழ்த்து பெற வந்துள்ளேன் என நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நல்லகண்ணு குறித்த நூறு கவிஞர்கள், நூறு கவிதைகள் என்ற கவிதை நூலை வெளியிட்டார்.
முன்னதாக நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட ஊக்கம் ஏதும் இல்லை என்றும் அவருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியது தனக்கு கிடைத்த பெருமை என்றும் இயக்கம் வேறு தான் வேறு என்று பார்க்காமல் உழைத்து, அந்த பணத்தை கட்சிக்காகவே கொடுத்தார் என்று புகழாரம் சூட்டினார்.
பொதுவாழ்வில் நம் எல்லோருக்கும் முன்னத்தி ஏராக – வழிகாட்டியாக – எடுத்துக்காட்டாக வாழும் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களின் தியாக வாழ்வைப் போற்றிப் புகழுவோம்!
விழா எடுத்த அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கும் என் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்!
கண்ணீர் சிந்திய மக்களின் வாழ்வு நலம் பெற -… pic.twitter.com/QtB2tBOkDG
— M.K.Stalin (@mkstalin) December 29, 2024
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தலைப்பதிவில் பொதுவாழ்வில் நம் எல்லோருக்கும் முன்னத்தி ஏராக – வழிகாட்டியாக – எடுத்துக்காட்டாக வாழும் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களின் தியாக வாழ்வைப் போற்றிப் புகழுவோம், விழா எடுத்த அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கும் என் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். கண்ணீர் சிந்திய மக்களின் வாழ்வு நலம் பெற – வளம் பெற செந்நீர் சிந்திய உத்தமரான நல்லகண்ணு அய்யாவின் வழிகாட்டுதலில் மக்களுக்கான திராவிட – பொதுவுடைமைக் கருத்தியலைச் செழும்பயிராய் வளர்ப்போம் என இவ்வாறே பதிவிட்டுள்ளார்.