அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த ஆர்.பி உதயகுமார்..!
அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில் திருமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
தொண்டர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாழ்த்தி வரவேற்றார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை அவர், அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போனார்கள் என்ற வரலாறு தமிழகத்தில் உள்ளதாக அண்ணாமலையை எச்சரித்தார்..
அதிமுகவை பொறுத்தவரை மக்கள் சேவையே கழகத்தினுடைய ஒரே கொள்கையாக வைத்து செயலாற்றி வருகின்றோம். ஆகவே இன்றைக்கு அண்ணாமலை அவர்கள் ஒவ்வொரு நாளும் அதிமுகவை பற்றி பேசுவது ஏறத்தாழ ரெண்டு கோடி தொண்டர்களும் மன வேதனை அடையும் வகையில் அணையப் போகும் விளக்கு பிரகாசமாக தான் எரியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அனைய போகும் விளக்கு அல்ல அதிமுகவை பொறுத்தவரை அணையா விளக்கு என்பது அன்னை தமிழக மக்களுக்கு தெரியும் என கூறினார்.
–ஜெய்முருகன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..