ரம்பா 48..!! இன்றும் ரசிகர்கள் மனதில் ரம்பா பெயர்..!
நடிகை ரம்பா ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் விசயலட்சுமி என்பதை திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை ரம்பா , தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி போன்ற மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் வெளிவந்த உழவன் திரைப்படமாகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது.
அந்த படத்தின் மூலம் அவருடைய ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைத்தனர். அதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த மின்சாரா கண்ணா, நினைந்தேன் வந்தாய்,விஐபி ,குங்கும பொட்டு கவுன்டர் போன்ற திரைப்படங்கள்
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்.
ரசிகர்களால் தொடை அழகி என அழைக்கப்படும் ரம்பா தனது 48 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடும் ரம்பா அவர்களுக்கு ரசிகர்கள் சார்பாகவும் மதிமுகம் சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-பவானிகார்த்திக்