ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்..!! அடுத்த பிரச்சாரம் எங்கே..? அப்டேட் கொடுத்த ராகுல் காந்தி..!!
ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் :
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். தற்போது மீண்டும் வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக கேரளா சென்றுள்ள ராகுல்காந்தி, பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
காலை 11மணிக்கு கல்பெட்டாவில் இருந்து நடைபெறும் சாலை பேரணியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் செயலாளர் கேசீ.வேணுகோபால், மற்றும் செயல் தலைவர் எம்.எச்.ஹாசன் உட்படபலரும் கலந்து கொண்டனர். தற்போது தொடங்கியுள்ள இந்த பேரணி மதியம் சிவில் ஸ்டேஷன் அருகே முடிவடையும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிர்வாகிகளுடன் பேரணியாக வந்த ராகுல் காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன் பின்னர், மீண்டும் நாளை டெல்லி திரும்புவார் எனவும் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஏப்ரல் 12-ஆம் தேதி நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல்.12-ம் தேதி மாலை கோவையில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல் பங்கேற்கிறார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..