கோவை மண்ணின் குயின்..!! நகைச்சுவையின் இளவரசி..! கோவை சரளாவிற்கு டுடே..?
சினிமால ஒரு முன்னணி நடிகையாக வவலம் வந்தவர்.., எனக்கு காமெடி மட்டுமல்ல ஹீரோயின் ரோலும் செட்டாகும் அப்படினு சொல்லிட்டு உலகநாயன் கமல்காசன் கூட மிகவும் அற்புதமான மனைவியாக நடிச்சி ஆடியன்ஸ் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார்.
அதுக்கு அப்புறம் காஞ்சனா படத்துல ஒரு அம்மா கேரக்டர் பண்ணியிருப்பாங்க, அவங்க என்னதா வேற வேற ரோல்ஸ் பண்ணாலும். அவங்க நடிச்ச அதனை படத்திலையும் ஒரு ஒற்றுமை இருக்கும்.
அது என்ன நானா..? வேற ஒன்னும் இல்லைங்க நம்ம எல்லாரும் சிரிக்க வைக்குறதுல முக்கியமான ஒரு பங்கு தான்.
அவங்க நடிப்பு முன்னணி காமெடி நடிகர்களோட சேர்ந்து நடிச்சுருப்பாங்க, ஆனாலும் வடிவேலுக்கு இவங்களுக்கும் தனியா ஒரு ரசிகர் பட்டாலமே இருக்குனு சொல்லலாம்.
இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து நடிச்ச எல்லா படமும் ஒரு பெரிய ஹிட்டுன்னு சொல்லலாம்.., இப்போ வரைக்கும் டிவில் இவங்க படம் போட்ட அத பாக்குறதுக்கு தனி ஆடியன்ஸ் இருப்பாங்க. “விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, காலம் மாறி போச்சு” இந்த இரண்டு படங்களும் ஒரு நல்ல என்டேர்டைன் மெண்ட்னு சொல்லலாம்.
வாழ்க்கை டைரி :
கோவை மண்ணில் பிறந்த நம்ப சரளா அம்மா.., முதன் முதலில் பாக்கியராஜ் படத்தில் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். முதல் படமே அதுவும் 16 வயதில் வயதான தோற்றத்தில் நடித்தால் பின் வரும் அனைத்து படங்களும். அதுபோல கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லியுள்ளார்.
ஆனால் சினிமாவின் மீது இருந்த ஆர்வமும்.., நடிகை மனோரம்மா அவர்கள் மீது இருந்த அன்பால் அன்று நடிக்க தொடங்கினார்.
அன்று முதல் இன்று வரை இவர் நடிக்காத கதாபாத்திரமும் கிடையாது.., இவரை விரும்பாத நடிகரும் கிடையாது. தற்போது வரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும். இவரால் உதவி அடைந்தவர்கள் ஏராளம்.
இவரிடம் யார் சென்று உதவி கேட்டாலும்.., அதனை மறுக்காமல் உதவ கூடிய குணம் இவருக்கு உண்டு. குறிப்பாக “கரகாட்டகாரன் ” படத்தில் வரும்., என்ன திருவாரூர் பார்ட்டில கூப்டாங்க, பொன்னர்மடி பார்ட்டில கூப்பிட்டாங்க, அவ்வளவு ஏன் காரக்குடி பார்ட்டில கூட கூப்பிட்டாங்க. ஆனா அங்கையெல்லாம் போகாம என் கிரகம் இந்த கரகம் கும்பல் மாட்டிக்கிட்டேன்” வசனம் தற்போது வரை பேமஸ்..
என்றும் நம்மை சிரிக்க வைத்த மற்றும் ரசிக்க வைத்த “கோவை சரளா” அம்மாவிற்கு மதிமுகம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..