சசிகலா இளவரசிக்கு பிடிவாரன்ட்..!! லோக் ஆயுக்தா நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன..?
சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு பரபரப்பான அக்ரஹாரா சிறையில் அடைப்பட்டிருந்த போது சொகுசு வசதிகள் வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுகப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது, அதற்காக அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது.
ஆனால் சசிகலா மற்றும் இளவரசி நேரில் ஆஜராகாமல் இருந்தனர். எனவே இருவருக்கும் பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உட்பட பலருக்கும் லஞ்சம் கொடுத்து தேவையான வசதிகளை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் வெளிவர காரணம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை குழுவை கர்நாடக அரசு அமைத்தது. அவர்கள் அளித்த அறிக்கையின் படி சிறையில் பல சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பது உண்மை ஆனால் இவை லஞ்ச பணம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதால், வசதிகள் செய்து கொடுத்தவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இந்த வழக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் முதல் குற்றவாளியாக சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளான டாக்டர் அனிதா, சுரேஷ் மற்றும் கஜராஜ் உட்பட ஏ1 முதல் ஏ4 வரை, ஐந்தாவது மற்றும் ஆறாவது குற்றவாளியாக சசிகலா மற்றும் இளவரசியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் லோக் ஆயுக்தா நீதிமன்றம் சசிகலா மற்றும் குற்றவாளிகளை நேரில் ஆஜராக விலக்கு அளித்ததுடன் தேவைப்படும்போது விசாரணைக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். ஆனால் வழக்கு தொடரப்பட்ட நாளில் இருந்து ஒருமுறை கூட நேரில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிட தக்கது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததை கவனித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், இரண்டு பேருக்கும் பிடிவாரண்ட் போட்டு உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் அவர்கள் இருவருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டவர்கள் வரை அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே விசாரணையை வருகிற அக்டோபர் 5ம் தேதி வரை ஒத்திவைத்து சசிகலா மற்றும் இளவரசிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடிவராண்ட் மீது இன்னும் சில நாட்களில் போலீசார் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
* சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததை கவனித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், அவர்கள் இருவருக்கும் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
* அவர்கள் இருவருக்கும் ஜாமீன் கையெழுத்திட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற அக்டோபர் 5ம் தேதி வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..