அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா..!! உண்மையை உடைத்து பேசிய அமைச்சர்..?
முன்னாள் புதுச்சேரி அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா (வயது 33) புகழ் பெற்ற சிறந்த அரசியல்வாதியாக செயல்பட்டு வந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு பகுதியில் ஆர்.எஸ்.சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. மேலும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் போக்குவரத்து துறை ஒதுக்கபட்டது. தற்போது சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்..
இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள சந்திர பிரியங்கா என்னை சுற்றி இருந்தவர்கள் எனக்கு குழி பரிப்பவர்கள் என தெரியாமல் சிக்கி கொண்டேன்..
ஒரு சட்டமன்ற உறுப்பினராக எனது பணியை நான் தொடங்கினேன்.., ஒரு பிற்படுத்தப்பட்ட சமுகத்தில் இருந்து ஒரு பெண் வந்து ஆட்சி செய்தால் என்ன இன்னல்கள் வரும் என்பதை நன்கு புரிந்து கொண்டேன்..
ஆரம்பத்தில் கடின உழைப்போடும், மனதைரியத்துடனும் இருந்தேன், மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் களத்தில் இறங்கி போராடினேன். அதன் பின் என் அறிவுக்கு எட்டியது.., மூளை இல்லாதவர்கள் முன் போராடினால் இது தான் நடக்கும். என உணர்ந்தேன்.
தலித் பெண்ணாக இருந்ததால் மற்றவர்களுக்கு அது ஆத்திரமாக இருந்துள்ளது.. ஆனால் என்னை வெற்றி பெற செய்த அனைவர்க்கும் நான் கடமை பட்டுள்ளேன், சமூக நலனுக்காக என்னோடு சேர்ந்து பணி செய்த பல அதிகாரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.., எனக்கு இந்த பொறுப்பை கொடுத்த முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கு நன்றி..
நான் உங்களுக்காக இந்த பணியை செய்ய தொடங்கினேன் ஆனால் இப்படி பொது பாதியிலேயே விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுவிட்டது பொது மக்கள் அனைவரும் என்னை மன்னித்து விடும்படி கேட்டு கொள்கிறேன்
சில அந்நிய சக்திகளுக்கு முன்.., என்னால் எதிர்த்து போராட முடியவில்லை என இவ்வாறே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..