கர்பமான 14 வயது மாணவி – போக்சோவில் கைதான வாடர்ன்..!
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், ஆரூர் தீர்த்தமலை கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி. பெற்றோரை பிரிந்து பாட்டியின் அரவணைப்பில் இருந்து வருகிறாள். அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
தினமும் அந்த வழியே மாணவி தனியாக தான் பள்ளி சென்று வந்துள்ளார். இதனை நோட்டமிட்ட குன்னூர் கிளைச்சிறை வாடர்ன் பார்த்திபன் , ஒரு நாள் மாணவி பள்ளி சென்று வீடு திரும்பும் போது மாணவியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை பற்றி வெளியே சொல்ல கூடாது, சொன்னால் உன் பாட்டியை கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
அவரின் மிரட்டலுக்கு பயந்த சிறுமி வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமி 4 மாதம் கர்பமாக, சிறுமியிடம் மாற்றம் உணர்ந்த சிறுமியின் பாட்டி ஆரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
மருத்துவமனையில் சிறுமி கர்பம் என தெரியவந்தது. பின் பாட்டியிடம் சிறுமி நடந்த சோகத்தை சொல்லி அழுத்திருக்கிறாள்.
இதனை அடுத்து ஆரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பெயரில் நேற்று மாலை வாடர்ன் பார்த்திபன் கைது செய்யப்பட்டார்.
மேலும் சிறுமி 18 வயது பூர்த்தி அடையவில்லை என்பதால், கருவை கலைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.