சென்னை கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்
சென்னை ஐ சி எ ஃ பில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் 13 வது ரயில் சேவையை இன்று சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்நவ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சிறப்பம்சங்கள் என்னென்ன?
- கோயம்புத்தூர் வரை செல்லும் இந்த ரயில் சேவை நாளை முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. புதன்கிழமை தவிர மற்ற ஆறு நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், அன்று முற்பகல் 11:50 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.
- அன்றே சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2. 25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் அன்று இரவு 8 15 மணிக்கு கோயம்புத்தூரை சென்று அடையும்.
- இது சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்றும், ஐந்து மணி நேரம் மற்றும் 50 நிமிடத்தில் இலக்கை அடையும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- கோவை-சென்னை இடையே இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 8 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.
- குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில் 450 இரண்டாம் நிலை இருக்கைகளும், 56 முதல் நிலை இருக்கைகளும் உள்ளன.
- முதல் நிலை இருக்கைக்கு ரூ.2,310-ம், இரண்டாம் நிலை இருக்கைக்கு ரூ.1215 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ரயில் 110 கி.மீ வேகத்தில் இயக்கப்படும்.
- தற்போது இந்த ரெயிலில் பயணிப்பதற்கான முன்பதிவுகள் தொடங்கி உள்ளது. பயணிக்க விரும்புவோர் இணையம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
- புதன்கிழமையை தவிர வாரத்தில் 6 நாட்களும் இந்த ரெயில் இயக்கப்படும். இந்த ரெயிலின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் கோவையிலேயே நடக்கும். பயணிகளின் வரவேற்பை பொறுத்து பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
















