அடுத்த ஆண்டு 50 ஓவர்கான உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது இந்தியா அணி தற்போது தகுந்த விளையாட்டு வீரர்களை அணியில் எடுப்பதில் தடுமாறி வருகிறது. இந்நிலையில், இந்தியா அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மானும் ஆன சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா அணி நிறைய திறமையான வீரர்களை கொண்டிருந்தாலும் ஏனோ உலககோப்பைகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. பல வீரர்களை மாற்றி மாற்றியும் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் 50 ஓவர்கான உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இந்தியாவில் உலகக்கோப்பை நடக்கவுள்ளதால் இந்த முறை இந்தியாகவிற்கு வாய்ப்பு இருக்கும் என்று உறுதியாக ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
டி20 உலககோப்பைக்கு பிறகு தொடர்களில் இந்தியாவின் முக்கிய வீரர்கள் தொடர்ந்து ஓய்வு அளிக்கபட்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவாகத்தான் நேரம் இருப்பதால் முக்கிய வீரர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் அவர்களுக்கு ஓய்வு அளிக்க தேவை இல்லை அப்போதுதான் வீரர்களுக்குள் நன்றாக புரிதல் ஏற்பட்டு உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.