செப்டம்பர் 24ல் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம்..!! முதலமைச்சரின் அசத்தல் தொடக்கம்..!!
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம், க்ரீன் நீடா சுற்று சூழல் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்துடன் இணைந்து ஒரு கோடி பனை விதைகளை நடும் பணி செப்டம்பர் 24ம் தேதி தொடங்க உள்ளது.
அதன் பெயரில் தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என அனைத்து மாவட்டங்களிலும் 1076கிமீ தொலைவில் ஒரு கோடி பனைமர விதைகள் நட்டு வைப்பதற்காக ஒரு லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
இது சம்மந்தமாக வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாரணாயணனுடன், துணை ஆசிரியர் தேவா இக்னேசியஸ் நேர்காணல் நடத்தினார்.
நேர்காணலில் பேசிய அவர் கருப்பட்டியை உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.., கருப்பட்டியின் உற்பத்தி அதிகம் தேவை. மேலும் பனை மரங்களை வெட்டு வதற்காக தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பனை ஏரும் நவீன இயந்திரம் கண்டு பிடிப்பவர்களுக்கு உரிய தொகையும் பரிசும் தமிழக அரசு வழங்க உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பனை மரத்தொழிலாளர்களின் வாழ்க்கை உயரும்.., இந்த திட்டம் வெற்றிகரமாக செயல் படுத்தப்படும் என இவ்வாறே அவர் பேசினார்.
Discussion about this post