போலி சான்றிதழ்.. வசமாக சிக்கிய ஊராட்சி மன்ற செயலாளர்..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேலகுப்பம் பகுதியை சேர்ந்த கிருபாகரன் (49) கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ஆற்காடு யூனியனுக்குட்பட்ட டி.சி.குப்பம் பகுதியில் ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வந்த இவர் தற்போது கீழ் குப்பம் பகுதியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கிருபாகரன் போலியான பத்தாம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பணியில் சேர்ந்து இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவின் பேரில் ஆற்காடு பி.டி.ஒ தலைமையில் விசாரணை நடைபெற்ற நிலையில் கிருபாகரன் போலியான பத்தாம் வகுப்பு சான்றிதழ் பயன்படுத்தி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் வளர்மதி கிருபாகரனை டி.சி.குப்பம் ஊராட்சி செயலாளர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார்..
மேலும் ஆற்காடு பி.டி.ஓ பாஸ்கர் போலியான பத்தாம் வகுப்பு சான்றிதழ் வைத்து பணியில் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட கிருபாகரன் மீது ரத்தினகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்.
புகாரின் பேரில் கிருபாகரன் மீது ஐபிசி 420.468. 470. என மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தால் மற்றும் ஆவணங்கள் பயன்படுத்துதல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு தலைமறைவாக உள்ள கிருபாகரனை தேடும் பணியில் போலீசார் மும்மூருமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்