இந்தியாவை பாராட்டும் பாகிஸ்தான்..!! ஏன் தெரியுமா..?
சந்திராயன் 3 வெற்றிகரமாக ஆகஸ்ட் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.., இஸ்ரோவின் இந்த சாதனை குறித்து பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதற்கு காரணம் எந்த நாடு செய்யாத ஒரு வரலாற்று சாதனையை இந்தியா செய்துள்ளது.
நிலவில் லேண்டர் தரையிறங்கிய அடுத்த நொடியே உலகின் பல நாடுகளில் இருந்து பொது மக்களும் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.., பல உலக நாடுகள் வாழ்த்து தெரிவித்து விட்டு நாம் கூறாமல் போனால்.., எப்படி ? என எண்ணிய பாகிஸ்தான் இன்று இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
நிலவை அடைவது அசாத்தியமான காரணம் அல்ல, நீங்கள் செய்து இருப்பது வரலாற்று சாதனை.., சந்திராயன் 3 மனித குலத்திற்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று அதை வெற்றிகரமாக செய்து முடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் என, பாகிஸ்தான் அறிவியல் துறை அமைச்சர் ஃபவத் ஹுசேன் சவுத்திரி தெரிவித்துள்ளார்.
Discussion about this post