நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த இதுவே உதாரணம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் பாஜக் கோட்டையாக உத்திரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றிப்பெற்றுள்ளார். அதுப்போல் சில தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியில் கட்சியினர் வெற்றி பெற்றனர்.
இதுக்குறித்து காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் ,
உ.பி. இடைத்தேர்தலில் 40,000 வாக்கு வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் வென்றுள்ளார். இதுவே பாஜகவை வீழ்த்த முடியும் என்பதற்கு உதாரணம். இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக பயப்படுவதால் இந்தியா என்ற பெயரை அக்கட்சி எதிர்க்கிறது. மேலும் பாரத் என்று வைத்திருந்தால் இந்தியா என்ற பெயரை பாஜக எதிர்த்திருக்காது. இந்தியா என்ற பெயரை மாற்ற அரசியல் சாசனத்தில் குறைந்தபட்சம் 5 திருத்தங்களையாவது செய்ய வேண்டும் .
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநில அரசுகளை பலவீனப்படுத்தவே கொண்டுவரப்படுகிறது. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியும்; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்தியா கூட்டணியில் செயற்குழு கூட்டத்தை கூட்டி தேர்தல் வியூகத்தை தலைவர்கள் வகுப்பார்கள் இவ்வாறு கூறினார்.