சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சென்னை ஐஐடி பல்கலைத்தில் இரண்டாம் ஆண்டு ரசாயன பொறியியல் படித்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் வளாகத்தில் இருந்து கல்லூரி விடுதியில் உள்ள தனது அறையில் சடலமாக வைக்கப்பட்டுள்ளார்.
மாணவரது சடலத்தைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், உடனடியாக விசாரணையைத் தொடங்கினார். அப்போது கடந்த சில நாட்களாகவே மாணவன் மன உளைச்சலில் இருந்து நிலையை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவர் சில நாட்களாகவே “என்னிடம் பேச யாருமே இல்லை” என அடிக்கடி கூறி வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் மாணவர் தனது சொந்த ஊரில் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னை ஐஐடி பல்கலைக்கழக வளாகத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நான்காவது மாணவர் இவர் ஆவார். இந்த மாத தொடக்கத்தில் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 32 வயது மாணவர் ஒருவர், தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதத்தில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த 20 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கடந்த பிப்ரவரியில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.