வெளியூர் பயணிகளுக்கு இனி கொண்டாட்டம் தான்..!!
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு, வெளியூா் செல்லும் பயணிகளுக்காக கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை அறிவிப்பை தொடர்ந்து, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிகாக இன்று இரவு 10 மணி வரை மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் ஆயிரத்து 250 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.