உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருன் நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஒன்றிய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொரோனாவின் புதிய வகை பிஎப் 7 வேரியண்ட் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் சீனா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒண்டிய ஆசு மேற்கொண்டு வரும் நிலையில் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
ஒன்றிய அரசு அறிவிப்பில், வரும் ஜனவரி 1ம் தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கோரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு நெகட்டிவ் PCR சான்றிதழ் கட்டாயம் என்றும் பயணத்திற்கு 72 மணி நேரம் முன்பாக சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த சான்றிதழ்களை “AIR SUVIDHA” என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.