விக்கிரவாண்டி தொகுதியின் அடுத்த எம்.எல்.ஏ..? தகனம் செய்யப்பட்ட புகழேந்தி உடல்..!!
விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்.எல்.ஏ புகழேந்தி கடந்த சில நேற்றைய முன்தினம் இரவு விழுப்புரம் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோருக்கு ஆதரவு திரட்டி பிரச்சாரம் செய்தார். அதனை தொடர்ந்து விழுப்புரம் விக்கிரவாண்டி சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட புகழேந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்குப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவரது மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்கப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழந்ததையடுத்து விக்ரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த தகவல் தேர்தல் ஆணையத்திற்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் விதிப்படி தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் அடுத்த மாதத்திற்குள் விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..