கமலஹாசனின் தக்ஃலைப் படத்திற்கு வந்த புது சிக்கல்..!! சர்ச்சையை கிளப்பிய அந்த ஒரு பெயர்…?
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் “தக் ஃலைப் (Thug Life)”.. இந்த படத்தில் நாயக்கர் என்ற சாதியை குறிக்கும் பெயரை வைத்திருப்பதால் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது…
மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் “Thug life.” படத்தில் நடிகர் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, மற்றும் த்ரிஷா உட்பட பலரும் நடிக்க உள்ளார்கள்..
இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்நிலையில் நேற்று தக் ஃலைப் படத்தின் அறிமுக வீடியோ வெளியானது.
மேலும் அந்த வீடியோவில் கமல்ஹாசனின் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என வைக்கப்பட்டுள்ளது.., அதாவது நாயக்கர் என்ற ஜாதி பெயர் வைக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சைகள் கிளம்பி வருகின்றனர்.
முற்போக்குவாதியான கமல்ஹாசன் சாதிகளை வைத்து படம் எடுப்பது இல்லை. இருந்த போதிலும், தேவர் மகன் படத்தில் சாதிப் பெயர் வைக்கப்பட்டது.
அந்த படத்திற்கு பின் கமல்ஹாசன் தற்போது சாதிகளின் பெயரை வைத்தும் அல்லது சாதியை வைத்தும் படம் எடுத்ததால் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியது..
கமல்ஹாசன் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சாதியின் பெயரை எந்த படத்திலும் ஹீரோக்களுக்கு வைப்பது கிடையாது.
இதற்கு முன் விருமாண்டி படத்தில் இவரின் பெயர் சண்டியர் என வைக்கப்பட்டிருந்த நிலையில்.., அதை மாற்றி விருமாண்டி என வைக்கப்பட்டது..,
அதை தொடர்ந்து தேவர்மகன் படத்தில் சக்தி வேல் தேவராக கமல் ஹாசன் நடித்திருப்பார். இந்நிலையில் தக் ஃலைப் படத்தில் சக்திவேல் நாயக்கராக நடிக்க இருக்கிறார்.
சக்தி வேலுக்கு பின்னர் உள்ள நாயக்கர் என்று வைக்கப்பட்டுள்ள சாதி என்ற பெயருக்கு தான் எதிர்ப்புகள் அதிகம் கிளம்பியுள்ளது…
இதனால் பலரும் சமூக வலைத்தளங்களில் கமல் ஹாசனை விமர்சித்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..