ஏப்ரல்-1ல் வரும் புது மாற்றம்..? சம்பளம் வாங்கும் ஊழியர்கள் கவனத்திற்கு..!!
வருமான வரி மாற்றங்கள் என்பது ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று. வருடத்தின் ஆரம்பம் மாதல் இறுதி ஆண்டு வரை நாம் வாங்கிய வருமானத்தை கணக்கிட்டு வரி சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இல்லையேல் வருடத்தின் இறுதியில் வரிக்காக பணத்தை இழக்ககூடிய கட்டாயம் ஏற்படுகிறது.
இந்நிலையில் 2024ம் நிதியாண்டில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சில வருமான வரி மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளது. அதை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் விதமாக ஆன்லைனில் எளிதாக அப்டேட் செய்யும் வசதியை கொண்டு வந்த பின் புதியவரி முறையில் அதிகமானோர் பங்கேற்க ஊக்குவிக்கும் நோக்கத்திலும், மத்திய நிதியமைச்சகம் புதிய வரி முறையே இயல்பாக தேர்வு செய்யும் default Option ஆக இருக்கும் விதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தனிநபர் பழைய வரி முறையில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்புகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பழைய வரி முறையைத் தேர்வு செய்து கொள்ளும் சுதந்திரம் தொடர்ந்து மத்திய நிதியமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.
புதிய வரி பலகைகள் (New Tax Slabs):
புதிய வரி முறையில் வரி விதிக்கப்படும் தொகைக்கான வரம்புகள் (Tax Slabs) மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இனி வரும் நிதியாண்டில், 3 லட்சம் முதல், 6லட்சம் வரை சம்பாதிக்கும் வருமானத்தினற்கு 5% வரியும், 6லட்சம் முதல் 9லட்சம் வரையி வருமானம் ஈட்டும் சம்பாத்தியதாருக்கு 10% வரியும், 9லட்சம் முதல் 12லட்சம் வரையில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 15%வரியும், 12 லட்சம் 15 லட்சம் வரையிலான சம்பாத்தியதாரர்களுக்கு 20% வரியும், 15 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 30% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பழைய வரி முறையில் மட்டுமே வழங்கப்பட்ட 50,000 ரூபாய் என்ற நிலையான விலக்கு (Standard Deduction) தற்போது புதிய வரி முறையிலும் பொருந்தும். அதன் காரணமாக, புதிய வரி முறையில் வரி செலுத்துபவர்களின் வரிக்கு உட்பட்ட வருமானம் குறைக்கப்பட்டுள்ளது.
5 கோடிக்கு மேற்பட்ட வருமானத்தினற்கு அதிகபட்சமாக (Surcharge) 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பெரும் செல்வந்தர்களுக்கு வரிச் சுமையைக் குறைக்கும்.
ஏப்ரல் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு வழங்கப்படும் ஆயுள் காப்பீட்டு திட்டங்களின் முதிர்ச்சித் தொகை 5 லட்சத்தை மீறினால், அந்தத் தொகைக்கு வரி விதிக்கப்படும். அதற்கு உட்பட்ட காப்பீடு திட்டத்திற்கு வரி விதிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர் அல்லாதோருக்கு வழங்கப்படும் விடுப்புச் சம்பளத்திற்கான ( leave encashment) வரி விலக்கு 3 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..