மோடியின் புதிய இந்தியா..! டிஜிட்டல் வழிப்பறியா..? முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லவருவது..?
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக. தமிழகத்தில். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரை விமர்சித்து போட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தாக முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் எடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் கராட் கூறுவது என்னவென்றால், குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிப்பதற்காக வசூலிக்கப்படும் தொகை 21,000 கோடி, கூடுதல் ஏடிஎம் பண பரிவர்த்தனைகளுக்கான தொகை 8,000 ஆயிரம் கோடி, எஸ்எம்எஸ் சேவைகளுக்கான தொகை 6,000 ஆயிரம் கோடி இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில் மத்திய அரசின் ஆய்விற்காக தனியார் வங்கிகளின் பட்டியலில் ஆக்சிஸ் வங்கி, ஐடிபிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஷிந்த் வங்கி, ஐசிஐசி வங்கிகள் இருப்பதாக நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் கராட் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச இருப்புத் தொகை கட்டணம் :
பொது மற்றும் தனியார் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாவது பராமரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாகவே அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளை வழங்குகிறது. இந்த இலவச எண்ணிக்கையைத் தாண்டி பரிவர்த்தனை செய்யும் போது, வங்கிகள் கட்டணம் வசூலிக்கிறது. இந்த கட்டணங்கள் வாடிக்கையாளரின் வங்கி மற்றும் பரிவர்த்தனை செய்யப்படும் ஏடிஎம் இடம் சார்ந்து மாறுபடும்.
இதனால் வங்கிகளால் வசூலிக்கப்படும் இந்த கட்டணங்களுக்கு, குறிப்பாகக் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களே பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா எனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரின் இந்த கேள்விக்கு இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..