அண்ணாமலை ஸ்லீப்பர் செல்லா..? சீமான் வெளியிட்ட பகீர் தகவல்..!! அண்ணாமலை சொன்ன பதில்..?
2024 லோக்சபா தேர்தலில் சில கூட்டணி கட்சிகளும் ஒரு சில தனி கட்சிகளும் பல சுயேட்சை கட்சிகளும் போட்டியிடுகின்றது. அந்த வகையில் அதிமுக – பாஜகயிடையே கூட்டணி அமைக்கப்படவில்லை என்றும் அது ஒரு பொய்யான நாடகம் என்றும் பல விமர்சனங்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நமக்கு அளித்திருந்த பேட்டி ஒன்றில் பாஜகவுடன் கூட்டணி 2024ல் மட்டுமல்ல 2026லும் கிடையாது என்று கூறியிருந்தார்.
இதனால் லோக்சபா தேர்தலில் அதிமுக – பாஜக இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் பிரச்சார கூட்டங்களில் அண்ணாமலை நேரடியாக எடப்பாடியை தாக்கி பேசவில்லை. எடப்பாடியும் அண்ணாமலையை தாக்கி பேசாமல் இருந்தநிலையில்.
ஆனால் அதற்கு நேர் மாறாக நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டிநிலவியது.இதனால் இரண்டு கட்சிகளும் மாறி மாறி மோது கொண்டது. அதற்கு காரணம் நாதகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம்.
2019ம் ஆண்டு தேர்தல் வரை நாதகவிற்கு கரும்பு விவசாய சின்னத்தை வைத்து போட்டியிட்ட நாதகவிற்கு தற்போது அந்த சின்னம் கொடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் கடுப்பான நாதக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும் தற்போதைய லோக்சபா தேர்தலுக்காக அவருக்கு மைக் சின்னம் ஒதுக்கப்படுள்ளது.
ஆனால் சீமானின் விவசாய சின்னம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கட்சிக்கு இந்த சின்னம் ஒத்துக்கப்பட்டுள்ளது. இதனால் நாதக சீமான் இந்த வழக்கை மேல் முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
அதனை தொடர்ந்து, மதுரை லோக்சபா தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யா தேவியை ஆதரித்து சில நாட்களுக்கு முன்பு கோ.புதூரில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
அண்ணாமலை என்னுடைய ஸ்லீப்பர் செல். நான் தான் அவரை பாஜகவிற்கு அனுப்பினேன். என் மண் என் மக்கள், வேல் யாத்திரை எல்லாம் நான் எடுத்த ஐடியாக்கள். அதனால் பிரதமர் மோடி, என் தம்பி அண்ணாமலை, எனக்கு கீழ் வேலை செய்கிறார்கள்.
அவர் மேலும் பேசுகையில் தாய் மீதும் தமிழ் மீதும் நான் ஆணையாக சொல்கிறேன். பதவிக்காகவோ பணத்திற்காகவோ நாதக ஆட்சிக்கு வரவில்லை.., மக்களுக்காகவும் அவர்கள் படும் கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. ஒரே ஒரு முறை நம் நாதகவிற்கு வாக்களித்து பாருங்கள், என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சீமான் அண்ணாமலையை ஸ்லீப்பர் செல் என சொன்னதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். நேற்று கோவை கவுண்டம்பாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த அவரை சந்தித்து நம் மதிமுகம் செய்தியாளர் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அண்ணாமலை பேசுகையில், சீமான் அவருக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை. எங்கே தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் அண்ணாமலை மீது சீமான் உட்கார்ந்துவிட்டார்.
சீமானை பொருத்தவரை, இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்க இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். இன்று களத்தில் பாஜக தனித்து நிற்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி தனித்து நிற்கிறது. பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்பார். எனவே தன்மீது உள்ள தவறை மறைக்க பாஜக மீது குற்றம் சாட்டி வருகிறார் சீமான் என்றும் பாஜகவில் இணைய முடியாது என கூறினார்.
இதற்கு சீமான் அளித்த பதிலில், தம்பி அண்ணாமலை என்னுடைய தம்பி என்னுடைய ரத்தம் அவன் பேசுவதும் நான் பேசுவதும் ஒன்னு தான். தம்பி அண்ணாமலை நீ எடுத்திருக்கிறது வெறும் போலீஸ் TRAINING, நான் எடுத்திருக்கிறது போராளி TRAINING என்று என பதிலடி கொடுத்தார். இப்படி லோக்சபா தேர்தல் களத்தில் நாம் தமிழர் – பாஜக இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது. இதுவரை சீமான் பாஜகவிற்கு எதிராக பேசி வந்த அவர், தற்போது அண்ணாமலை தம்பி என்றும் பாஜகவுடன் கூட்டணி வைக்க முற்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..