சிறை சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி..!!
காவிரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்..!
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு ஓமந்தூர் மருத்துவமனையில் மதிக்கப்பட்டார்.
அங்கிருந்து ஜூன் 15ம் தேதி காவேரி மருத்துவமனைக்கு மாற்றபட்டர். பின் ஜூன் 21ம் தேதி செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி நடைபெற்றது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி மனு தாக்கல் செய்து இருந்தார். அப்போது ஆட்கொணர்வு வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
அதில் நீதிபதி பரத சக்கரவர்த்தி, “இந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று சொல்லி இன்னும் 10 நாட்களுக்குள் காவேரி மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றி, சிறையில் சிகிச்சை கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்யலாம் என அனுமதி வழங்கினார். எனவே அதன் பெயரில் இன்று காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு.., மாலை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
Discussion about this post