மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மின்வாரிய தொழிற்சங்கங்கள் உடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக, தொழிற்சங்க நிர்வாகிகளுடன், மின் வாரியம் நடத்திய பேச்சில், 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முடிவாகி உள்ளது.
தமிழக மின் வாரியத்தில் பணிபுரிவோருக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக மின் வாரிய ஊதிய நிர்ணய குழு தலைவர் சுந்தரவதனம் தலைமையிலான அதிகாரிகள், தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
19 சங்க நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அதனை எழுத்துப்பூர்வமாக அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது மின் வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.