சுகாதார சீர்கேடு தொடர்பாக பேசுவதற்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ்-ஐ கண் அழற்சிநோய் வார்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
சென்னையில் சுகாதார சீர்கேடு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் கேள்விக்கு….
சென்னையை சிங்கப்பூர் மாதிரி எடப்பாடி பழனிச்சாமி வைத்திருந்தாரா??? சுகாதார சீர்கேடு தொடர்பாக கொஞ்சம் கூட பேசுவதற்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார்….