மெட்ரோ வாகன பார்க்கிங்கு கட்டண உயர்வு..!! அதிர்ச்சியில் பயணிகள்..!!
சென்னையில் இருக்கும் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பார்க்கிங்காக நிறுத்தப்படுவதும், அதற்காக கட்டணம் வசூலிக்கப்படுவதும் வழக்கம். இந்த பார்க்கிங் ஆனது எவ்வளவு மணி நேரம் நிறுத்தி வைக்கிறோம் என்பது குறித்து கட்டணம் வசூலிக்கப்படும்.
மெட்ரோவில் பயணம் செய்யாதவர்கள் கூட, பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தி விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். முக்கியமாக பரங்கிமலை, கிண்டி, திரிசூலம் பகுதியில் இருக்கும் மெட்ரோ நிலையங்களில், மின்சார ரயிலில் பயணம் செய்பவரகள் கூட, மெட்ரோ நிலையத்தில் வாகனம் நிறுத்துவிட்டு செல்கிறார்கள்.
எனவே அப்படி நிறுத்தி விட்டு பயணம் செய்யும், பயணிகளுக்கு மட்டும் கட்டண உயர்வை அதிகரித்துள்ளதாகவும். இந்த செயல்பாடு நாளை மறுநாள் தொடங்கப் போவதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதிய விலை உயர்வு பட்டியல் :
6 Hrs – 20 ரூபாய்,
6 Hrs டூ 12 Hrs – 30 ரூபாய்,
12 Hrs க்கு மேல் வாகனம் நிறுத்தினால் 40 ரூபாய்,
மாதாந்திர கட்டணம் 6 மணி நேரத்திற்கு 750 ரூபாய்,
மாதாந்திர கட்டணம் 12 மணி நேரத்திற்கு 1500 ரூபாய் ஆகவும், உயர்த்தப்பட்டுள்ளது.
மெட்ரோ பயண அட்டைவைத்திருக்கும் பயணிகளுக்கு பழையகட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.