தாகத உறவை தட்டிக்கேட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் தாக்கு..!! பதப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுசெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பீரன், கௌரி தம்பதியினருக்கு கிருஷ்ணமூர்த்தி, மல்லப்பன், பொன்னீர் செல்வன் மற்றும் ஒரு சகோதரிகள் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இளைய மகன் பன்னீர் செல்வத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் பேளுர் கிராமத்தை சேர்ந்த சைத்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர்செல்வன் சாலை விபத்தில் இறந்துள்ளார். இந்நிலையில் லாரி ஓட்டுனராக இருந்த மல்லப்பன் தாய், தந்தை, சகோதரர்கள் இறந்து போன சோகத்தில் சற்று மனநலம் பாதிக்கபட்டுள்ளார்.
அவரை, அவருடைய சகோதரி சென்னையில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையும், பெற்று வீடு திரும்பி வந்த நிலையில். காடுசெட்டிபட்டி கிராமத்தில் உள்ள மல்லப்பனின் தம்பி மனைவி சைத்ராவுக்கு அதே கிராமத்தில் உள்ள உறவுக்கார பெண் மல்லி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மல்லி கணவரை இழந்த சைத்ராவிற்கு வேறு ஆண் நண்பரை அறிமுகபடுத்தி வைத்துள்ளார். இவர்களுக்கு தகாத உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த மல்லப்பன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மல்லியிடம் தகராறுவில் ஈடுபட்டுள்ளார். என் தம்பி மனைவியை தகாத உறவு ஏற்படுத்தி வைத்த மல்லிகை கண்டித்துள்ளார்.
அதனையடுத்து மல்லி என்பவர் பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் இருப்பதால் சற்று மனநலம் பாதிக்கபட்ட மல்லப்பன் மீது பொய்யான புகார் கொடுத்து சிறையில் அடைத்துள்ளனர்.அவர் முன்ஜாமின் பெற்று மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.
சிறையில் இருந்து வந்த மல்லப்பனால் சைத்ராவிற்கு பிரச்சனை ஏற்படும் என்ற நிலையில் மல்லி அவரது சகோதர் முருகன் மற்றும் அடியாட்களை கொண்டு தர்மபுரி ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ள பேக்கரி கடையில் அமர்ந்திருந்த மல்லப்பனை கடுமையாக்கி தாக்கி கை கால்களை கட்டி போட்டு இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து சென்று கிராமத்தின் மைய பகுதியில் கோயில் அருகே வைத்து கம்பத்தில் கட்டி வைத்து மீண்டும் கடுமையாக தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து அருகில் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல்துறையிடம் மல்லப்பனின் சகோதரி கதறி அழுதாலும் புகார் தெரிவித்தும் கண்டும் காணாமல் துரத்தி அனுப்பி வைத்துள்ளனர். ஊர் முக்கியஸ்தர்கள் வந்து பேசியதால் அவரை அந்த கும்பல் விடுவித்துள்ளனர்.
அதனை தொர்ந்து பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பஞ்சப்பள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் துரத்தி உள்ளனர். சற்று மனநலம் பாதிக்கபட்ட நபரை கை கால்கள் கட்டப்பட்டு கடுமையாக தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழத்துவது வேதனையாக உள்ளது.
மேலும் மல்லப்பனை கடுமையாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுதி உள்ளது. மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் தானக முன் வந்து வழக்கு பதிவு செய்யாமல் துரத்திய காவல் துறையினர் மற்றும் அடியாட்கள் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்லப்பனின் சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.