மனநல பாதிப்பு… போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்..!
சென்னை அண்ணா நகர் அருகே உள்ள அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி. 33 வயதான இவர் மீது, அப்பகுதி காவல் நிலையத்தில், கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, பாலமுரளியும் அவரது தாயும் திருச்சிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
அங்கு சென்ற பிறகு, மது போதைக்கு அடிமையான இவருக்கு, சற்று மனநலமும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சென்னை அண்ணா நகருக்கு வந்த பாலமுரளி, பெட்ரோல் குண்டு தயார் செய்து, போலீஸ் பூத் மீது வீசியுள்ளார். பின்னர், அங்கிருந்த டாஸ்மாக் கடை மீதும் வீசினார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவ்வழியாக வந்த சிலர், பாலமுரளியை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அவனை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவ்வாறு நடந்து கொண்டாதாக தெரிய வந்துள்ளது. இதனைதொடர்ந்து அவருக்கு சற்று மனநலம் சற்று சரியில்லாத காரணத்தினால் போலீசார் அவரை சிகிச்சைக்காக மனநல காப்பகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
-பவானி கார்த்திக்