நீங்கள் பார்க்க மறந்த பல முக்கிய செய்திகள் உங்கள் பார்வைக்காக…!!
எடிஷன் கோ கிளாம் விற்பனை கண்காட்சி :
வருகின்ற தீபாவளியை உற்சாகமாக கொண்டாடும் வகையில் தீபாவளி ஸ்பெஷல் எடிஷன் கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் துவங்கியது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள், நகைகள்,பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஹேண்ட் பேக்குகள், , ஜிமிக்கி கம்மல், வளையல், வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம் கங்கணப்புத்தூர் ஊராட்சியில் நீடூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில்தொடர்ந்து கடந்த சில நாட்களாக பூச்சிகள் காரணமாக பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள் பாதிக்கப்பட்டு முகம் மற்றும் உடல் பகுதிகளில் கடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் நலன் கருதி அப்பகுதியில் உள்ள பூச்சிகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணிபுரிபவர் முருகன். இவர் பழைய பேருந்து நிலையம் அருகில் மக்கான் பகுதியில் துப்புரவு பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக தொழிலாளர்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோத்த போது அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உளுந்தை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் பதவியேற்ற நாள் முதல் விசேஷ நாட்கள் என்றால் கிராம மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் ஆயுத பூஜை நாளை ஒட்டி உளுந்தை கிராமத்தில் உள்ள சுமார் 1500 குடும்பங்களுக்கு 4200 மதிப்பிலான மிக்ஸி இனிப்பு வகைகளை வழங்கி உள்ளார்.