வசமாக சிக்கிய மகாவிஷ்ணு..!! கிடைத்த முக்கிய ஆவணம்..!!
சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மோடிவேஷன் அளிக்கும் வகையிலான நிகழ்ச்சி ஒன்று பள்ளி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகவும் வருகை தந்த பரம்பொருள் என்ற அறக்கட்டளையை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மனம் வருந்தும் வண்ணம் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில் இவர் மீது மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த செப்.7 ஆம் தேதி விமான நிலையத்தில் வைத்து தலைமறைவாகியிருந்த மகாவிஷ்ணுவை கைது செய்தனர்.
அதன் பின்னர் மகாவிஷ்ணுவை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறையினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.. அந்த மனு மீதான விசாரணை நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது.. சைதாப்பேட்டை நான்காவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுப்பிரமணியம் முன்பு மகாவிஷ்ணு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்…
அதனை அடுத்து நேற்று விசாரணைக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணுவை திருப்பூருக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிருந்தனர்..
அதனை தொடர்ந்து திருப்பூரில் உள்ள மகாவிஷ்ணுவிற்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது… விசாரணைகள் முடிவடைந்த நிலையில் மகாவிஷ்ணுவை போலீசார் சென்னை அழைத்து வர உள்ளனர்.
மகாவிஷ்ணுவிடம் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மகாவிஷ்ணுவின் விசாரணையை ஒட்டி பரம்பொருள் அறக்கட்டளை அலுவலக பகுதியில் போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்படுள்ளது என்பது குறிப்பிடதக்கது..