நீங்கள் பார்க்க மறந்த பல முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் வாகனங்களை இயக்க முடியாததால் இயல்பு வாக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் காட்பாடி, சித்தூர் பேருந்து நிலையத்தில் மழை நீருடன் கலந்து கழிவு நீர் வெளியேறி குலம் போல் காட்சி அளிப்பதால் பேருந்தில் செல்லும் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல் அச்சமங்கலம் காலனி தெருவில் பல வருடத்திற்கு முன்பு தொலைக்காட்சி அறை கட்டப்பட்டுள்ளதை தற்போது கிராம ஊராட்சி பொது நிதியிலிருந்து சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் வணிக கட்டிடமாக மாற்றி புதுப்பித்தனர். இந்த கட்டிடம் நடுத்தெருவில் உள்ளதால் கனமழையின் காரணமாக இந்தப் பகுதியில் மழைநீர் தேங்கி வீட்டிற்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம், செவிலியர்களுக்கு இலவச சேலை, அன்னதானமும் வழங்கி திருப்பூர் மாவட்ட பாஜகவினர் கொண்டாடியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விடியற் காலை முதல் தற்பொழுது வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி குளங்கள் தடுப்பணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. நீண்ட நாட்களுக்கு பின் தற்பொழுது பெய்த கன மழையால் இன்னும் ஓராண்டுக்கு வேளாண்மை செய்ய ஏதுவான சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்னர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்போது பட்டாசுகளை வாங்கிக் கொண்டு ரயில் மூலம் செல்வதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே என்னென்ன எளிதில் தீப்பிடிக்கும் பட்டாசு போன்ற பொருட்களை கண்டிப்பாக கொண்டு செல்லக்கூடாது என்பதை பொது மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துரையினர் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.




![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/10/Picsart_24-10-20_21-51-11-340-75x75.jpg)











