ராசிபுரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் 8 வகுப்பறைகளின் பூட்டை உடைத்து மின் ஒயர்கள் திருட்டு. காவல் நிலையம் அருகே திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பு…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகலுர்கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை அன்று மர்ம நபர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள 8 வகுப்பறைகளின் பூட்டை உடைத்து மின் ஒயர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைகளின் பூட்டை உடைத்து ஒயர்கள், மின்விசிறி உள்ளிட்ட எலக்ட்ரிகல் பொருட்கள் சேதம் அடைந்ததை குறித்து கல்லூரி முதல்வர் பானுமதியுடன் தகவல் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் பானுமதி ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் கல்லூரி வளாகத்தில் அருகாமையிலே ராசிபுரம் காவல் நிலைய உதவி மையமானது செயல்பட்டு வருகிறது. கல்லூரி அருகாமையிலேயே காவல் நிலையம் உள்ள போது மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…