பிரபல காமெடி நடிகருக்கு மனைவியாக போகும் லக்ஷ்மிமேனன்..!!
நடிகை லக்ஷ்மிமேனன் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போதே தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.. இவரின் முதல் படம் சுந்தரபாண்டியன் என்றாலும், கும்கி படமே இவருக்கு வெற்றியை கொடுத்தது..
கும்கி படம் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றியை கொடுத்தது.., இதனால் லக்ஷ்மி மேனனுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.., இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.
குட்டி புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, ஜிகிர்தாண்ட, மிருதன், கொம்பன் போன்ற பல படங்களில் நடித்தார்.., ஆனால் விஷாலுடன் ஏற்பட்ட கிசுகிசுவால் லக்ஷ்மி மேனனுக்கு மார்கெட்டிங் குறைந்தது.. இதனால் பல பட வாய்ப்புகளும் போனது.
லாங் கேப்பிற்கு அப்புறம் கம்பேக் கொடுத்திருக்கும் லக்ஷ்மிமேனன்.., சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.., இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும்.., அடுத்த படம் வெற்றி தான் என சொல்ல வைக்கும் அளவிற்கு ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து.., காமெடி கலந்த காதல் படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது..