திருமணம் என்ற பெயரில் மோசடி செய்த கேரளா பெண்..! ஏமார்ந்த வாலிபர்கள்..! போலீஸ் வலை வீச்சு..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பனூத்து பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 29), காற்றாலையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அவருக்கு மது பழக்கம் இருந்ததால் அவரது மனைவி அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு மறுமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர். அப்போது கேரள மாநிலம் கொழிஞ்சம் பாறை பகுதியை சேர்ந்த திருமண புரோக்கர் ஒருவர் ராதாகிருஷ்ணனை அணுகியுள்ளார்.
அவர் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை காண்பித்து. அந்த பெண் ராதாகிருஷ்ணனுக்கு பிடிக்கவே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெண்ணின் வீட்டில் வசதி இல்லாததால் ஏதாவது உதவி செய்யுமாறு புரோக்கர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் வீட்டினர் அந்த பெண்ணுக்கு 1½ பவுனில் நகை போட்டுள்ளனர். மேலும் புரோக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணனுக்கும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கும் உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்ருள்ளது.
பின்னர் அவர்கள் தாராபுரத்திற்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது கேரள பெண், ராதாகிருஷ்ணனிடம் தனக்கு மாதவிடாய். எனவே மற்றொரு நாள் இதை வைத்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
அதனை நம்பிய ராதாகிருஷ்ணனும் சம்மதம் தெரிவித்துள்ளார். மறுநாள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரை பார்க்க செல்ல வேண்டும் என்று தெரிவிக்கவே, ராதா கிருஷ்ணன், தாலி கட்டிய மனைவியை பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். பொள்ளாச்சிக்கு சென்றதும் கேரள பெண் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ள தன் தாயாரை பார்த்துவிட்டு வருவதாக தனது புதிய கணவர் இடம் சொல்லிவிட்டு மருத்துவமனையின் ஒரு பகுதிக்குள் சென்றனர்.
பல மணி நேரமாகியும் கேரள பெண், புது மாப்பிள்ளை ராதாகிருஷ்ணனை வந்து பார்க்கவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாப்பிள்ளை திடீரென மாயமான கேரள மனைவியை அனைத்து பகுதியிலும் தேடிப் பார்த்துள்ளார்.
எங்கு தேடியும் எந்த பெண் கிடைக்காததால் சோகத்துடன் தாராபுரத்திற்கு சென்று நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது நகை, பணத்திற்காக ராதாகிருஷ்ணனை ஏமாற்றி கேரள பெண் திருமணம். செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணின் கணவர்தான் திருமண புரோக்கர் என்பதும் தெரியவந்தது.
இதுபோல் திருமணம் ஆகாத வாலிபர்களிடம் பணம், நகையை பறிப்பதற்காக அந்த புரோக்கர் தனது மனைவியையே வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைத்து நூதன திருமண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருப்பினும் அவர்கள் பணத்திற்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சிக்காமல் இருக்க தங்களது பெயரை மாற்றி கொடுத்து ஏமாற்றி உள்ளனர். இதையடுத்து திருமண புரோக்கரையும் அவரது மனைவியையும் போலீசார் தேடி வருகின்றனர்.
அவர்கள் பிடிபட்டால் இது போன்று அவர்கள் யார் யாரை எல்லாம் ஏமாற்றி பணம் – நகை பறித்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..