காவலன் பட இயக்குனர் சித்திக் திடீர் மாரடைப்பு..!! தீவிர சிகிச்சையில் அனுமதி.!!
தமிழில் ப்ரண்ட்ஸ், காவலன் மற்றும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சித்திக் இன்று காலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவரின் உடல்நிலை கவலை கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழில் மட்டுமல்லாது மலையாளத்திலும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் 1986ம் ஆண்டு ஜி ரஹ்மான், மோஹன்லால், திலகன், லிசி, பகதூர், உன்னிமேரி,ராஜன், தேவ், பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான படம் தான் “பாப்பான் ப்ரியப்பேட்ட பாப்பன்” இந்த படத்தின் மூலம் இயக்குனர் சித்திக் புகழ் பெற்றார்.
அதன் தமிழில் நடிகர் விஜய், சூர்யா, தேவயானி, வடிவேலு, சார்லி, ரமேஷ் கண்ணா, ராதா ரவி , மற்றும் சரிதா உட்பட பலர் நடித்து ரசிகர்களால் வெற்றி பெற்ற படம் தான் “ப்ரண்ட்ஸ்”.., இரு நண்பர்களின் கதையை எதார்த்தமாக சொல்லிய ஒரு திரைப்படம்.., ரசிகர்களையும் மக்களையும் வெகு விரைவாக கவர்ந்தது.
மீண்டும் தமிழில் இவர் இயக்கிய படம் தான் “காவலன்” ஒரு தலை காதலாக போனில் மட்டும் பேசி காதலித்து கடைசியில் காதலின் தோழியை காதலி என நினைத்து ஊரை விட்டு சென்று விடுவார்கள்.., கடைசியில் இழந்த காதலும் மீண்டும் சேரும் மாறும் கதை எழுதப்பட்டிருக்கும்.
இந்த காதல் கதை பலரையும் வெகு விரைவாக கவர்ந்தது.., அது மட்டுமின்றி அதில் வரும் காதல் வசனங்களும், காமெடி வசனங்களும் இன்று வரை பலர் மனதிலும் இடம் பிடித்து இருக்கிறது.
தற்போது கேரளாவில் மற்றொரு மலையாள படம் இயக்க இருக்கும் நிலையில் இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சற்று அவரின் உடல் நிலை மோசமாக இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நிலை கவலை கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ரசிகர்கள் அவருக்காக பல கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..