மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன்(70) இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கருமுத்து கண்ணன் கோச்சடை பகுதியில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 4.50 மணிக்கு காலமானார்.
இவரது இறுதிச் சடங்குகள் மதுரை கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை நாளை மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ளது.
கருமுத்து கண்ணன் 15 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலராக இருந்து வந்தார். அனைத்து கட்சியினருடனும் நெருக்கமாக பழகும் கருமுத்து கண்ணனுக்கு அதிமுக, திமுக இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கரு.முத்து கண்ணனின் உடலைப் பார்த்து கதறி கண்ணீர் விட்டப்படியே அஞ்சலி செலுத்தினார்.
Discussion about this post