ஆளுநர் என்பதற்காக அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது..!! சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்…!!
ஆளுநர் என்பதற்காக அவர் சொல்லும் சட்டமன்ற மரபுகளை மாற்றமுடியாது என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று முடிந்தது. முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருநது வெளியேறினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, அண்ணா பல்கலை வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவியை கண்டித்து அதிமுகவினர் முழக்கங்கள் எழுப்பியதால் அதிமுகவினரை வெளியேற உத்தரவிட்டதாக தெரிவித்தார். உரையாற்ற வரும் ஆளுநருக்கு பேரவையில் கருத்து சொல்ல அனுமதி இல்லை என்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் கூட தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் ஆளுநர் என்பதற்காக சட்டமன்ற மரபுகளை மாற்றமுடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.