நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜெயிலர் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. மொத்தம் 7000 ஆயிரம் திரை அரங்கில் வெளியாகியுள்ளது.
படம் வெளியான அன்றே உலகம் முழுவதும் சேர்த்து கிட்டத்தட்ட இப்படத்தின் வசூல் ரூ.90 கோடியை எட்டியது. அடுத்தநாள் ரூ.60 கோடியும், 3ம் நாள் ரூ.50 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், படம் வெளியாகி 3 நாட்களில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.70 கோடியும், ஆந்திராவில் ரூ.25 கோடியும், கேரளாவில் ரூ.17.50 கோடியும், கர்நாடகாவில் ரூ.22.70 கோடியும், வட மாநிலங்களில் ரூ.5 கோடியும், வெளிநாடுகளில் ரூ.101 கோடி என மொத்தம் ரூ.241.25 கோடியை இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த வெற்றி ரஜினிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Discussion about this post