ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா..!!
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த நடித்துள்ள படம் “ஜெயிலர்” இத் திரைப்படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திலிருந்து அனிருத் இசையில் “காவாலா, ஹுக்கும்” என இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் இத்திரை படத்தின் புரமோஷன் போதுமான அளவிற்கு இல்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். புரமோஷன் போதுமான அளவிற்கு இல்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், சன் டிவி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது, அதனுடன் இதுவரை நடந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜிகாந்த் பேசிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஹெராஃப், வசந்த் ரவி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், விநாயகன், யோகி பாபு, என நிறைய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஜெயிலர் படத்திற்கு விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது ரசிகர்களுக்கு இன்னும் ட்ரீட் தரும் விதமாக மாறியுள்ளது.
Discussion about this post